News October 12, 2025
2027 உலக கோப்பையில் விளையாட விருப்பம்: ஜடேஜா

2027 உலக கோப்பையில் விளையாட விரும்புவதாக ஆல்ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா ODI தொடருக்கு தான் தேர்வாகாதது குறித்த காரணத்தை கேப்டன், பயிற்சியாளர், தேர்வுக்குழு கூறியதாக குறிப்பிட்ட அவர், வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக செயல்பட்டு 2027 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற முயற்சிப்பேன் என்றும் கூறினார். மேலும் ODI உலக கோப்பையை வெல்வதே தனது கனவு எனவும் பேசியுள்ளார்.
Similar News
News October 12, 2025
டிரோன் தாக்குதலில் 60 பேர் பலி

ஆப்ரிக்க நாடான சூடானில் துணை ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர். 3 ஆண்டுகளாக உள்நாட்டு கிளர்ச்சி நீடிக்கும் நிலையில், வடக்கு டார்பூரில் நடத்தப்பட்ட தாக்குதலில், பல குழந்தைகளும், பெண்களும் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆளும் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையிலான மோதலால் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 12, 2025
மதுரையில் பிரசார பயணத்தை தொடங்குகிறார் நயினார்

மதுரையில் இன்று தனது முதல்கட்ட பிரசார பயணத்தை நயினார் நாகேந்திரன் தொடங்குகிறார். அண்ணாநகர் பகுதியில் நடைபெறும் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ தொடக்க நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும், கர்ப்பிணிகள் பங்கேற்க கூடாது உள்ளிட்ட 15-க்கும் அதிகமான நிபந்தனைகளை நயினாரின் பரப்புரைக்கு மதுரை போலீஸ் விதித்துள்ளது.
News October 12, 2025
Women’s WC: இன்று இந்தியா Vs ஆஸ்திரேலியா

மகளிர் உலக கோப்பையில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா, வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது. நடப்பு தொடரில் தோல்வியே காணாத ஆஸி., இப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேற நினைக்கிறது. வலுவான ஆஸி.,யை வீழ்த்த வேண்டுமானால் இந்தியா கடுமையான போட்டியை வெளிப்படுத்துவது அவசியம்.