News May 25, 2024
உதவியாளர்களிடம் கதை சொல்ல வேண்டுமா?

டாடா, ஸ்டார் ஆகிய இரு படங்களின் வசூல் ரீதியிலான வெற்றியைத் தொடர்ந்து, வளர்ந்துவரும் இளம் நடிகர்களின் பட்டியலில் லேட்டஸ்டாக நடிகர் கவின் இணைந்துள்ளார். ‘ஸ்டார்’ படம் ₹7 கோடியை வசூலித்ததை அடுத்து, தனது சம்பளத்தை ₹5 கோடியாக கவின் உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன், இனி அவரின் இரு உதவியாளர்கள் கதையைக் கேட்டு ஓகே செய்தால் மட்டுமே 3ஆவதாக கவின் கேட்பார் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
Similar News
News March 10, 2026
வீடுகள் விலை… ஒரே நாளில் ₹7.3 கோடி குறைந்தது

போர் காரணமாக துபாய் மற்றும் அபுதாபியில் ரியல் எஸ்டேட் பெரும் சரிவை சந்தித்துள்ளது. அபுதாபியில் 4BHK அடுக்குமாடி குடியிருப்பின் விலை ஒரே நாளில் ₹7.3 கோடி குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போர்ச் சூழல் தொடர்ந்தால் UAE-யின் பொருளாதாரம் சரியும் என்றும், இது வளைகுடாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
News March 10, 2026
BIG FLASH: சர்வதேச தரத்தில் மாறப்போகும் மதுரை ஏர்போர்ட்

மதுரை ஏர்போர்ட்டை சர்வதேச தரத்தில் மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓடுதளம் 2,285 மீட்டரிலிருந்து 3,810 மீட்டராக நீட்டிக்கப்படுகிறது. இதற்காக 653 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, புதிய முனையம் மற்றும் நவீன வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. தென் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றான மதுரை ஏர்போர்ட் நவீன மயமாக்கப்பட்டால், தென் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.
News March 10, 2026
வங்கிக் கணக்கில் 2,000.. வந்தாச்சு HAPPY NEWS

விவசாயிகளுக்கான PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகை ₹2,000, மார்ச் 13-ம் தேதி விடுவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அசாமில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் இந்த நிதியை பிரதமர் மோடி விடுவிக்க உள்ளார். பிப்ரவரி மாதமே இந்த நிதி வரும் என காத்திருந்த விவசாயிகளுக்கு, இப்போது நல்ல செய்தி வந்துள்ளது. முக்கியமாக, உங்கள் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


