News February 16, 2025

உங்கள் போனில் எவ்வளவு Radiation அறிய வேண்டுமா..!

image

மொபைல் போன்கள் Radiationஐ வெளியிடுவது தெரிந்ததே. ஆனால், தாங்கள் உபயோகிக்கும் போனின் சரியான Radiation அளவை பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள். இதை Specific Absorption Rate (SAR) மூலம் கண்டறியலாம். நீங்கள் போன் வாங்கும் போது கொடுக்கப்பட்ட யூசர் Manual அல்லது நிறுவனத்தின் இணையதளத்தில் காணலாம். அப்படி இல்லை என்றால், உங்கள் தொலைபேசியில் *#07# டயல் செய்வதன் மூலம் விவரங்களை அறியலாம். SHARE IT.

Similar News

News March 4, 2026

தஞ்சை: கல்விச் செலவை அரசே ஏற்கும் – விஜய்

image

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 04) தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது விஜய் பேசுகையில், 2 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பிள்ளைகளின் மருத்துவம், பொறியியல் படிப்புக்கான கல்விச் செலவை அரசு முழுமையாக ஏற்கும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

News March 4, 2026

சமையலால் மாமியாருடன் சண்டை.. மருமகள் தற்கொலை

image

பெங்களூருவை சேர்ந்த சுஷ்மா(35) புனித் தம்பதிக்கு 4 வயது மகன் உள்ளார். சுஷ்மாவிற்கும் மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சமையல் செய்வது தொடர்பாக மாமியாருடன் சண்டை ஏற்பட, மனமுடைந்த சுஷ்மா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வரதட்சணைக்காக அவரை கொடுமைப்படுத்தியதாக பெண் வீட்டார் குற்றம்சாட்ட, தற்போது புனித் கைது செய்யப்பட்டுள்ளார். மாமியார் தலைமறைவாகியுள்ளார்.

News March 4, 2026

இந்தி பெயருக்கு அதிகாரிகளே காரணம்: தமிழிசை

image

திருச்சி ரயில் நிலையத்தின் புதிய நுழைவாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என பெயரிடப்பட்டுள்ளதற்கு <<19295250>>CM ஸ்டாலின்<<>> உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியில் உள்ள பெயரை தமிழில் மாற்ற ரயில்வே துறை அமைச்சருக்கு தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். அதிகாரிகள் செய்த தவறுக்கு மத்திய அரசு இந்தியை திணிப்பதாக குற்றம்சாட்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!