News October 11, 2025

நல்ல சம்பளத்துடன் மத்திய அரசு வேலை வேண்டுமா?

image

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில்(SSC) 552 Head Constable பணியிடங்கள் காலியாக உள்ளன. 10-வது அல்லது +2 முடித்த 18- 27 வயதுக்குட்பட்டவர்கள் அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கணினி வழி, உடற்தகுதி, மெடிக்கல் டெஸ்ட் உள்ளிட்ட 5 தேர்வுகள் நடைபெறும். இந்த வேலைக்கு மாதம் ₹25,500-₹81,100 வரை கிடைக்கும். விருப்பமுள்ளவர்கள் <>https://ssc.gov.in<<>> -ல் விண்ணப்பியுங்கள். SHARE.

Similar News

News March 4, 2026

CINEMA 360: தள்ளிப்போன டாக்ஸிக் ரிலீஸ்!

image

யஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படத்தின் வெளியீடு ஜூன் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. GCC நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தின் காரணமாக தள்ளிவக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் *MR ராதாவிற்கு ‘ரத்தக்கண்ணீர்’, ராதிகாவுக்கு ‘தாய் கிழவி’ என நடிகர் சிவகுமார் புகழ்ந்துள்ளார் *’வா வாத்தியார்’ படம் ஏற்படுத்திய நஷ்டத்தால், தனது க்ரீன் சினிமாஸ் தியேட்டரை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விற்று விட்டாராம்

News March 4, 2026

போர் பதற்றம்: இந்தியர்களுக்கு உதவ கண்ட்ரோல் ரூம்

image

மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு டெல்லியில் பிரத்யேக கட்டுப்பாட்டு மையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த மையம் காலை 9 – இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றத்தில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உதவும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இலவச எண்கள் மற்றும் இந்திய தூதரகங்களின் எண்கள் மேலே போட்டோவாக இணைக்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

தங்கம் விலை மொத்தம் ₹4,600 குறைந்தது

image

அமெரிக்கா – ஈரான் இடையே போர் வெடித்துள்ளதால், ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,
இம்மாதம் தொடங்கியதில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே செல்கிறது. மார்ச் 1-ம் தேதி சவரனுக்கு ₹1,26,200-ஆக இருந்த தங்கம் விலை சுமார் ₹4,600 குறைந்து ₹1,21,600-க்கு இன்று (மார்ச் 4) விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!