News February 28, 2025
50% நிதிப் பகிர்வு வேண்டும்: தங்கம் தென்னரசு

மாநிலங்களுக்கான நிதியை 40% ஆக குறைத்து நிதிக்குழு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டியுள்ளார். மாநிலங்களுக்கு 50% நிதிப்பகிர்வு வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்துவதாக கூறிய அவர், 41%லிருந்து 40%ஆக பரிந்துரைக்கும் நிதிக்குழு முடிவை ஏற்க முடியாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சிறப்பாக செயல்படும் மாநிலங்களை இப்படியா நடத்துவது என்றும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News February 28, 2025
ரூ.90 லட்சம் கோடி மாயம்

இந்திய பங்குச்சந்தைகளுக்கு இது போதாத காலம் போல. தொடர் சரிவை கண்டுவந்த நிலையில் இன்று NIFTY 400+ புள்ளிகளையும், BSE 1400 புள்ளிகளையும் இழந்தன. தேசிய பங்குச்சந்தையின் NIFTY, கடந்த செப்-ல் 26,277.35 புள்ளிகள் என்ற உச்சநிலையை அடைந்தது. அதிலிருந்து இன்றுவரை 15% சரிந்துள்ளது. SEP-லிருந்து இன்றுவரை நிறுவனங்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.90 லட்சம் கோடி இழக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
News February 28, 2025
மல்யுத்த வீரர் ஒசாமு நிஷிமுரா காலமானார்

ஜப்பானைச் சேர்ந்த புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ஒசாமு நிஷிமுரா (53) காலமானார். கடந்த ஓராண்டாக உணவுக்குழாய் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது, 4வது ஸ்டேஜில் தான் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அவர் கடந்த டிசம்பர் மாதம் வரை மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொண்டு வந்துள்ளார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News February 28, 2025
WPL: டெல்லி அணிக்கு 124 ரன்கள் இலக்கு

மகளிர் பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடரில், டெல்லி அணிக்கு 124 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி. பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் முதலில் களமிறங்கிய MIW அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹெய்லி மேத்யூஸ் 22, ஹர்மன்பிரீத் 22, அமெலியா 17 ரன்கள் எடுத்தனர். DCW தரப்பில், ஜொனாசென், மின்னு மணி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.