News August 7, 2024
தலை நிமிர்ந்து நடங்கள் போகத்: நயன்தாரா

ஒலிம்பிக்கில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு நடிகை நயன்தாரா ஆறுதல் தெரிவித்திருக்கிறார். அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், “தலை நிமிர்ந்து நடங்கள் போராளியே. நீங்கள் பலரை ஊக்குவித்திருக்கிறீர்கள். உங்கள் மதிப்பு வெற்றிகளால் அளக்கப்படுவதல்ல. சாதனைகளை முறியடிக்கும் வகையிலான அன்பை நீங்கள் சேகரித்திருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 22, 2025
ஸ்மிருதி மந்தனா வரலாற்று சாதனை

டி20-ல் 4,000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான டி20-ல் 19 ரன்கள் அடித்த போது அவர் இச்சாதனையை படைத்தார். குறைந்த பந்துகளில் 4,000 ரன்களை அடித்த வீராங்கனை என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார். அதிக ரன்கள் பட்டியலில் NZ-ன் சூஸி பேட்ஸ் முதலிடத்திலும், ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்திலும், ஹர்மன்பிரீத் கவுர் 3-வது இடத்திலும் உள்ளனர்.
News December 22, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 22, மார்கழி 7 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: த்ரிதியை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News December 22, 2025
பாஜக கண்டுபிடித்த புதிய மொழி: ப.சிதம்பரம்

ஹிந்தி சொற்களை ஆங்கிலத்தில் எழுதி, பாஜக அரசு புதிய மொழி ஒன்றை கண்டுபிடித்திருப்பதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது ஹிந்தியும் அல்ல, ஆங்கிலமும் அல்ல; இந்தி மட்டும் தெரிந்தவர்கள் இதைப் படிக்க முடியாது, ஆங்கிலம் தெரிந்தவர்கள் படிக்க முடியும் ஆனால் பொருள் புரியாது ; இரு மொழிகளையும் சிதைப்பது தான் பா ஜ க அரசின் மொழிக் கொள்கையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


