News August 8, 2024
வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல்

மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். வக்ஃபு வாரிய சொத்துகளை மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்யும் வகையில் இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதா அரசியல் அமைப்பின் அடிப்படை மீதே தாக்குதல் நடத்துவதாக அமைந்துள்ளதாக எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
Similar News
News October 27, 2025
அக்.26: வரலாற்றில் இன்று

*1971 – காங்கோ மக்களாட்சிக் குடியரசு சயீர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
*1941 – நடிகர் சிவகுமார் பிறந்தநாள்.
*1977 – இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்ககரா பிறந்தநாள்.
*1986 – ஆஸி., கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பிறந்தநாள்.
*2002 – மூத்த அரசியல்வாதி வாழப்பாடி ராமமூர்த்தி நினைவுநாள்.
News October 27, 2025
2026 களம் கூட்டணி ஆட்சிக்கானது: கிருஷ்ணசாமி

ஆட்சியில் பங்கு இருந்தால் மட்டுமே மக்களின் பிரச்னைகளை களைய முடியும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026-ல் எந்த கட்சியும் தனித்து ஜெயிக்க முடியாது என்ற அவர், 2026 தேர்தல் களம் கூட்டணி ஆட்சிக்கானது என்றும் உறுதிபட கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு கூட்டணி ஆட்சியை கிருஷ்ணசாமி தொடந்து வலியுறுத்தி வருவது, தவெக – புதிய தமிழகம் கூட்டணி அமையவே என்றும் கூறப்படுகிறது.
News October 27, 2025
One last time.. ரோஹித் சஸ்பென்ஸ் பதிவு

ODI தொடரை முடித்துவிட்டு, ரோஹித் இந்தியா திரும்பியுள்ளார். அதற்கு முன்னதாக, ‘One last time, signing off from Sydney’ என்று X பக்கத்தில் பதிவிட்டது வைரலாகிறது. 3-வது ODI போட்டியின் ஆட்ட நாயகன் & தொடர் நாயகன் விருதையும் வென்று, 2027 உலகக் கோப்பைக்கான கதவை பிரகாசமாக திறந்தார் ரோஹித். ஆனால், ஒன் லாஸ்ட் டைம் என கூறியதும் ரோஹித் ஓய்வு பெறுகிறாரோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


