News April 2, 2025
விற்பனையில் நம்பர் 1 இடத்தை பிடித்த வேகன்ஆர்

2024-25 நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் என்ற சாதனையை மாருதி சுசூகியின் வேகன்ஆர் பெற்றுள்ளது. வேகன்ஆர் மாடல் கார் 1.98 விற்பனையாகியுள்ளன. இதற்கடுத்து 2ஆவது அதிகபட்சமாக டாடாவின் பன்ச் கார்கள் 1.96 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பிறகு ஹூயின்டாயின் கிரேட்டா கார்கள் 1.94 லட்சமும், மாருதியின் எர்டிகா 1.90 லட்சமும், பிரெஸா 1.89 லட்சமும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நீங்கள் எந்த கார் வாங்கினீர்கள்?
Similar News
News August 13, 2025
ஆக.16 லீவ்! ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் கிடையாது

வாரந்தோறும் சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்று வருகிறது. ஆனால், வரும் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. இதனால், அன்றைய தினம் தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் சனிக்கிழமை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறாது என்று அரசு தரப்பில் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News August 13, 2025
முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை தேவை: அன்புமணி

இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகள் மூலம் 28,516 பேருக்கு வேலை கிடைக்கும் என CM உறுதியளித்ததை சுட்டிக்காட்டிய அவர், அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என சாடியுள்ளார். 10.62 லட்சம் கோடி முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தானபோதும், ஈர்க்கப்பட்ட முதலீடு வெறும் ₹18,498 கோடிதான் எனவும் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
எத்தனால் கலப்பு பெட்ரோலால் பாதிப்பு இல்லை: மத்திய அரசு

எத்தனால் கலந்த பெட்ரோலால் வண்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பால் 30% கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவதாகவும், எத்தனால் கலப்பு பெட்ரோலால் வண்டிகள் பழுதடைவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும், ஓட்டும் விதம், பராமரிப்பு உள்ளிட்ட காரணிகள் தான் வண்டியின் மைலேஜை தீர்மானிப்பதாகவும் தெரிவித்துள்ளது.