News March 15, 2025

விலைவாசிக்கு ஏற்ப ஊதிய உயர்வு: நிலைக்குழு பரிந்துரை

image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட ஊதியத்தை விலைவாசிக்கு ஏற்ப உயர்த்த மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஊதியத்தில் வேறுபாடு உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஊரக மேம்பாட்டுக்கான நிலைக்குழு, நாடு முழுவதும் ஒரே சீரான ஊதியத்தை வழங்கவும் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து பலமுறை பரிந்துரை அளித்தும் செயல்படுத்தவில்லை எனவும் விமர்சித்துள்ளது.

Similar News

News March 15, 2025

படுக்கையறையை பராமரியுங்கள்… மகிழ்ச்சி கூடும்

image

வரவேற்பறை மற்றும் வீட்டின் பிற அறைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படுக்கையறைக்கு நாம் கொடுப்பதில்லை. இதனால் தூக்கத்தின் தரம் கெடுகிறது, மன அழுத்தம் அதிகரிக்கிறது, பல நோய்களும் கூட ஏற்பட காரணமாகிறது. படுக்கை அறையை சரியாக பராமரித்தால், உங்கள் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். தாம்பத்ய வாழ்க்கையும் கூட மேம்படும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

News March 15, 2025

214 பிணைய கைதிகள் சுட்டுக் கொலை: BLA அதிர்ச்சி தகவல்

image

214 ரயில் பயணிகளை சுட்டுக் கொன்று விட்டதாக பலுசிஸ்தான் விடுதலை படை (பிஎல்ஏ) தெரிவித்துள்ளது. பணயக் கைதிகள் குறித்து பாகிஸ்தானுக்கு 48 மணி நேர கெடு விதித்தும், பதில் அளிக்காததால் 214 பேரை கொன்று விட்டதாக பிஎல்ஏ கூறியுள்ளது. 400 பேருடன் சென்ற பயணிகள் ரயிலை பிஎல்ஏ அண்மையில் கடத்தியது. இதில் 33 பிஎல்ஏ அமைப்பினர் கொல்லப்பட்டதாகவும், 354 பயணிகள் மீட்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியிருந்தது.

News March 15, 2025

ஆண்களே, ரிலாக்ஸ் பிளீஸ்…

image

ஸ்ட்ரெஸ் அதிகமுள்ள ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் பாதிக்கப்படுவதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. குழந்தையின்மைக்கான காரணங்களில் 40% ஆண்களிடமே உள்ளது. இந்நிலையில் வேலை மற்றும் பிற பிரச்னைகளால் மன அழுத்தத்துக்கு ஆளாகும் ஆண்களின் உடலில், டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அளவு குறைவதாகவும், இது அவர்களின் விந்தணு தரத்தை பாதிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஆகவே, ஆண்களே டென்ஷன் ஆகாதீங்க. ரிலாக்ஸ் பிளீஸ்!

error: Content is protected !!