News April 22, 2025
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு தலா ₹2,000 உயர்வு வழங்கப்படும் என்றும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க ஆண்டொன்றுக்கு ₹64.08 கோடி கூடுதல் செலவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 50,000 இலவச விவசாய மின் இணைப்புகள் இந்தாண்டு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
BREAKING: செங்கோட்டையனை தொடர்ந்து அடுத்த தலைவர்

செங்கோட்டையன் நேற்று முன்தினம் டெல்லி சென்று திரும்பிய நிலையில், இன்று நயினார் நாகேந்திரன் டெல்லி செல்ல உள்ளார். அங்கு அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. NDA கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து தலைவர்கள் விலகல், அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம், பாஜக உள்கட்சி பிரச்னைகள் குறித்து பேச உள்ளாராம். மீண்டும் TN அரசியல் பஞ்சாயத்து டெல்லியில் கூட உள்ளது.
News September 11, 2025
நீங்களும் 3D வடிவில் மாறணுமா.. இதை பண்ணுங்க

உங்களை 3D வடிவில் பார்க்க ஆசையா? Nano Banana பயன்படுத்துங்க. SM-ல் சில நாள்களாக இந்த Nano Banana வைரலாகி வருகிறது. இதற்கு நீங்கள் கூகுள் AI ஸ்டூடியோவிற்குள் செல்ல வேண்டும். Try Nano Banana தேர்வு செய்தால் Gemini 2.5 Flash இமேஜிற்குள் நுழைவீர்கள். அதில் உங்கள் புகைப்படத்தை அப்லோட் செய்தால் போதும். பிடித்தமான டிசைனில் உங்களை 3D வடிவில் மாற்றிடலாம்.
News September 11, 2025
கழுத்து வலி நீங்க இந்த யோகாசனம் பண்ணுங்க!

கழுத்து, முதுகு வலி நீங்க சலபாசனம் செய்து பழகுங்கள்.
*மார்பு தரையில் படும்படி, கை- கால்களை நீட்டி படுக்கவும்.
*இரு பாதங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்க வேண்டும்.
*இரு கைகளையும் பின்னோக்கி நீட்டி, மார்பை மேலே உயர்த்தவும்.
*உள்ளங்கைகளை முதுகின் மேல் கொண்டு வந்து பிடித்து, நேராக பார்க்கவும். *இந்தநிலையில் 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.