News May 13, 2024
வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு

ஆந்திராவில் அன்னமய்யா மாவட்டம் தளவாய்ப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களை உடைத்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே, தங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் 15 பேர் கடத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 11, 2026
BREAKING: கேஸ் சிலிண்டர்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், கேஸ் விநியோகத்தை சீர்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சக்கரபாணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, கேஸ் சிலிண்டர் விநியோகம், பெட்ரோல் இருப்பு குறித்து குழு அமைக்கப்பட்டு ஆராயப்படும் என அவர் அறிவித்துள்ளார். அதன்பின், தட்டுப்பாடின்றி சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமாம்.
News March 11, 2026
BREAKING: மார்ச் 28-ல் தொடங்கும் IPL திருவிழா!

ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் IPL 2026 தொடருக்கான முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 28-ம் தேதி இத்தொடரின் முதல் போட்டியில் RCB, SRH அணிகள் பெங்களூருவில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 30-ம் தேதியன்று, கவுகாத்தியில் CSK தனது முதல் போட்டியை RR அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. CSK அட்டவணை: மார்ச் 30- RR, ஏப். 3- PBKS, ஏப். 5- RCB, ஏப். 11- DC.
News March 11, 2026
நகைக் கடன் தள்ளுபடி முடிவு.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

திருச்சி திமுக மாநில மாநாட்டில் <<19350365>>நகைக் கடன்<<>> தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, தேர்தல் அறிக்கையில் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை சேர்க்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனிமொழி தலைமையிலான குழு, தேர்தல் அறிக்கையை விரைவில் ஸ்டாலினிடம் வழங்க உள்ளது. இதன்பின், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.


