News April 20, 2024

முறையாக வாக்குப்பதிவு நடக்கவில்லை

image

தமிழ்நாட்டில் ஜனநாயக முறைப்படி வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்று தென்சென்னை வேட்பாளர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். வாக்குச் சதவீதம் குறைந்தது கவலையளிக்கிறது எனக் கூறிய அவர், வாக்காளர்களின் பெயர்கள் கொத்துக் கொத்தாக நீக்கப்பட்டுள்ளன. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் தேர்தலை நடத்தக்கூடாது. வாரத்தின் முதல் கடைசி நாளில் தேர்தலை நடத்தினால், மக்கள் விடுமுறையில் சென்று விடுகின்றனர் என வேதனை தெரிவித்தார்.

Similar News

News August 21, 2025

2,833 காவலர் பணியிடங்கள்.. TNUSRB அறிவிப்பு

image

2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) வெளியிட்டுள்ளது. 631 தீயணைப்பு வீரர்கள், 180 சிறைக் காவலர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான விண்ணப்பப்பதிவு நாளை (ஆக.22) தொடங்கி செப்.21-வுடன் முடிவடைகிறது. நவ.9-ல் எழுத்துத் தேர்வு நடைபெறும். கல்வித்தகுதி உள்பட மேலும் தகவல்களை அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும்.

News August 21, 2025

அதிகாலையிலேயே சரக்கு … சர்ச்சையாகும் தவெக மாநாடு

image

மதுரையில் TVK மாநாடு நடைபெறும் பகுதியில் இன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும், தவெக மாநாட்டு பந்தலுக்கு அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் அமர்ந்து தவெக தொண்டர்கள் மது அருந்தி கொண்டிருக்கும் PHOTO வெளியாகியுள்ளது. மாநாட்டுக்கு வரும்போதே சரக்கு வாங்கிட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாநாட்டின் போதும், மாநாட்டு பந்தலிலேயே TVK தொண்டர்கள் மது அருந்தியது சர்ச்சையானது.

News August 21, 2025

உங்களுக்கு ஒரு ‘குட்டி ஸ்டோரி’

image

மழை வேண்டி அனைவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது என்று ஒரு கிராமத்தினர் முடிவு எடுத்தனர். திட்டமிட்ட நாளில் அனைவரும் ஓரிடத்தில் கூடி, மிக பயபக்தியுடன் கடவுளிடம் மழை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் கையில் குடையுடன் அங்கு வந்தான்….இது தானே நம்பிக்கை!

error: Content is protected !!