News April 20, 2024

வாக்குப்பதிவு சதவீதம்: மாறுபாடு (1)

image

தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் நேற்றிரவு 7 மணி, இரவு 12 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் மாறுபட்டுள்ளது. அதைப் பார்க்கலாம். இரவு 7மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் வடசென்னையில் 69.26%, இரவு 12 மணி அறிவிப்பில் 60.13% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணி அறிவிப்பில் காஞ்சிபுரத்தில் 72.99%, இரவு 12 மணி அறிவிப்பில் 71.55% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 20, 2025

ஆன்லைன் கேமிங் தடை மசோதா தாக்கலானது

image

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேமிங் செயலிகளுக்கு தடை விதிக்கும் <<17454534>>புதிய மசோதா<<>> லோக் சபாவில் தாக்கலானது. இனி ஆன்லைன் பெட்டிங் கேம் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டு சிறை, ₹1 கோடி அபராதம்; விளம்பரம் செய்தால் 2 ஆண்டு சிறை, ₹50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். புதிதாக உருவாக்கப்படும் National Online gaming Commission, விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும். இந்த சட்டத்தை நீங்கள் வரவேற்கிறீர்களா?

News August 20, 2025

பாஜகவை தமிழக மக்கள் நம்புகின்றனர்: அண்ணாமலை

image

தவெக 2-வது மாநில மாநாட்டை விஜய் நன்றாக நடத்த வேண்டும் என அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுகவை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு NDA கூட்டணிக்கு ஆதரவளிக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பாஜகவின் சித்தாந்தத்தையும், கொள்கைகளையும் மக்கள் அதிகமாக நம்பத் தொடங்கிவிட்டதாக தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையின் கருத்து உண்மையாகுமா?

News August 20, 2025

SRK-வை ரீபிளேஸ் செய்த SK?

image

மதராஸி படத்திற்கு சிவகார்த்திகேயன் கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்துள்ளார். 7 வருடங்களுக்கு முன்பு படத்தின் ஒன்லைனை ஷாருக் கானுக்கு சொன்னதாகவும், அதை அவர் பிடித்திருக்கிறது என்றதாகவும் தெரிவித்தார். ஆனால், அதன்பின் SRK-விடம் இருந்து அழைப்பு வராததால், கதாபாத்திரத்தை மெருகேற்றி SK-வை தேர்வு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!