News March 18, 2024
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வரலாறு

வாக்காளர் அடையாள அட்டையில் ஆரம்ப காலத்தில் வாக்காளர்களின் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது. 1957 இல், புகைப்பட அடையாள அட்டைகளை வழங்குவதற்கான யோசனை உருவானது. 1979 சிக்கிம் தேர்தலிலும், பின்னர் வடகிழக்கு மாநிலங்களிலும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1994 இல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1997ல் வாக்காளர் பட்டியல் கணினிமயமாக்கல் துவங்கியது.
Similar News
News September 7, 2025
UPI கட்டண வரம்புகள் விவரம்

தனிநபர்கள் நிறுவனங்களுக்கு UPI மூலம் பணம் செலுத்தும்(P2M) வரம்பு செப்.15 முதல் உயர்கிறது. அதன்படி, கிரெடிட் கார்டு பேமெண்ட்க்கு ஒரு பரிவர்த்தனைக்கு ₹5 லட்சம் (ஒரு நாளைக்கு ₹6 லட்சம்), பயணக் கட்டணம் -₹5 லட்சம், லோன் & EMI -₹5 லட்சம் (₹10 லட்சம்), முதலீடு & இன்ஷூரன்ஸ் -₹5 லட்சம் (₹10 லட்சம்), வரி -₹5 லட்சம், வங்கி சேவைகள் -₹5 லட்சம். எனினும், தனிநபர்களுக்கு அனுப்பும் வரம்பு ₹1 லட்சமாகவே தொடரும்.
News September 7, 2025
தள்ளுபடியுடன் அபராதம் கட்டிய CM சித்தராமையா

2024 ஆண்டில் இருந்து இதுவரை 7 முறை சித்தராமையாவின் வாகனம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளது. விதிகளை மீறியதற்காக மொத்தமாக அவருக்கு ₹5,000 அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில் 50% தள்ளுபடியை கர்நாடக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. எனவே, ₹2,500 அபராத தொகையை சித்தராமையா செலுத்தியுள்ளார்.
News September 7, 2025
இந்தியாவின் 4-வது கோப்பை

ஆசியக் கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடரில் இந்தியா 4-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. 1982 முதல் நடைபெற்றுவரும் இந்த தொடரில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள தென்கொரியா முதலிடத்தில் உள்ளது. 4 முறை சாம்பியனான இந்தியா 2-வது இடத்திலும், 3 முறை பட்டம் வென்ற பாகிஸ்தான் 3-வது இடத்திலும் உள்ளன. சீனா, ஜப்பான், மலேசிய அணிகள் ஒருமுறை கூட பட்டம் வென்றதில்லை.