News January 3, 2026

Voter list-ல் பெயர் இல்லையா? இன்று சிறப்பு முகாம்

image

SIR-க்கு பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து, விடுபட்ட வாக்காளர்கள் மீண்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ECI அறிவித்தது. இந்நிலையில், இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. எனவே, நீக்கப்பட்டவர்களில் தகுதியானவர்கள் இருப்பின், தேவையான ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் SHARE IT.

Similar News

News January 10, 2026

புதுகை: சாலை விபத்தில் துடிதுடித்து பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் இருந்து வடகாட்டிற்கு நேற்று குணசேகரன் (60) பைக்கில் சென்றுள்ளார். அப்போது வடகாடு அம்புலி ஆற்றின் அருகே உள்ள சாலையில் பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

பிக்பாஸில் இந்த வாரம் எவிக்‌ஷன் இவரா?

image

பிக்பாஸ் ஃபைனலுக்கு ஒருவாரமே உள்ள நிலையில், டாப் 5-ல் அரோரா, சாண்ட்ரா, திவ்யா, சபரி, விக்ரம் உள்ளனர். ₹18 லட்சம் பணப்பெட்டியுன் கானா வினோத் வீட்டைவிட்டு வெளியேறினாலும், இந்த வாரமும் எவிக்‌ஷன் இருக்கும் எனக் கூறப்படுகிறது. TTF வென்றதால் அரோரா நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறிவிட்டார். தற்போது, விக்ரம் & சாண்ட்ரா குறைவான வாக்குகளை பெற்று டேஞ்சரில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யார் வெளியேறுவார்?

News January 10, 2026

இனி பள்ளிகளில் மாலை சிற்றுண்டி?

image

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மதிய சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாலை நேரத்தில் ஊட்டச்சத்து நிறைந்த சிற்றுண்டி வழங்க பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து துறை, சமூக நலத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. இதில் வாழைப்பழம், சிறுதானியங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளதாம். ஒருவேளை செயல்படுத்தப்பட்டால் எந்தெந்த உணவுகளை சேர்க்கலாம்?

error: Content is protected !!