News September 28, 2025
விரும்பியவருக்கு ஓட்டு போடுங்க.. கூட்டம் போடாதீர்கள்’

ஓட்டு போடுங்கள் – விரும்பும் நபர்களுக்கு, ஆனால் வாழ்வை தொலைக்க கூட்டம் போடாதீர்கள் என கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது X தள பதிவில், 10 குழந்தைகள் பலியானதை சுட்டிக்காட்டி, இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
<<-se>>#karurstampede<<>>
Similar News
News September 28, 2025
கரூரில் சீமானை முற்றுகையிட்ட குடும்பத்தினர்

கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் சிக்கி காயமடைந்தவர்களை நலம் விசாரிக்க கரூர் அரசு ஹாஸ்பிடலுக்கு சீமான் சென்றார். இதனையடுத்து, பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களை காண முற்பட்ட சீமானை, பலியானோரின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். தங்களை பிணவறையினுள் செல்ல அனுமதிக்கவில்லை எனவும், உடல்களை விரைவில் ஒப்படைக்க மறுக்கிறார்கள் என்றும் சீமானிடம் கூறி முறையிட்டுள்ளனர்.
News September 28, 2025
கரூர் சம்பவத்தால் தாங்க முடியாத துயரம்: கார்த்தி

கரூரிலிருந்து வந்த செய்தி தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனவும் X-ல் அவர் பதிவிட்டுள்ளார். இனி ஒருபோதும் இவ்வாறு நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்போம் என்று கார்த்தி கூறியுள்ளார்.
News September 28, 2025
சற்றுமுன்: நீதிபதி இல்லத்திற்கே சென்ற தவெகவினர்

சென்னையில் உள்ள நீதிபதி தண்டபாணி இல்லத்துக்கு தவெக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அறிவழகன், CTR நிர்மல்குமார் சென்றுள்ளார். கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் எனவும், CCTV ஆதாரங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனவும் முறையீடு செய்துள்ளனர். இதனை நீதிபதி ஏற்கும் பட்சத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் அவசர வழக்காக விசாரணைக்கு வரலாம் என கூறப்படுகிறது.