News April 26, 2024
வெறுப்புக்கு எதிராக வாக்களியுங்கள்…

கேரளாவில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை பார்வதி, வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவும், மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவும் வாக்களியுங்கள் என வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News March 24, 2026
நாகை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

நாகை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!
News March 24, 2026
சற்றுமுன்: கூட்டணியை நிராகரித்தார் திருமா

கூட்டணிக்கு வருமாறு திருமாவளவனிடம் <<19461589>>தவெக <<>>தரப்பில் மீண்டும் பேசியதாக சற்றுமுன் தகவல் வெளியானது. ஆனால், திமுக கூட்டணியை விட்டு வெளியேறினால் நம்பகத்தன்மை போய்விடும் என்றும், திமுக கூட்டணியில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் எனவும் திருமா எண்ணுவதாக தெரிகிறது. இதனால், தவெகவின் கூட்டணி அழைப்பை ஆரம்ப கட்டத்திலேயே திருமா நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
News March 24, 2026
மோடி, அமித்ஷாவுக்கு END நெருங்குகிறது: கெஜ்ரிவால்

மோடி, அமித்ஷாவின் ஆட்சி முடிவுக்கு வரப்போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஒரு காலத்தில், மோடிக்கு எதிராக மீம் பதிவிட்டவர்கள் கூட கைதானதாக கூறிய அவர், ஆனால் இன்றோ, மோடி மீதான விமர்சனங்களால் SM பக்கங்கள் நிரம்பி வழிகின்றன என்றார். மேலும், மோடி & பாஜகவின் செல்வாக்க சரிந்து வருகிறது என்றும் ஆனாலும் அவர் இன்னும் தேர்தல்களில் வெல்கிறார் என்றால் அதற்கு EC தான் காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.


