News July 7, 2024
தொண்டர்கள் வாக்களிக்க மாட்டார்கள்: பிரேமலதா

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக தொண்டர்கள் புறக்கணிப்பார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஆளும் திமுக அரசு தேர்தல் முறைகேடுகளில் வெளிப்படையாக ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
Similar News
News September 24, 2025
அதிமுக ஆபிஸின் அதிகாரம் டெல்லியில் உள்ளது: கனிமொழி

அமித்ஷா வீட்டில் தான் அதிமுகவின் ஆபீஸ் உள்ளது என்று கனிமொழி கூறியதற்கு, திமுகவின் அறிவாலயத்தை காப்பாற்றி கொடுத்ததே ஜெயலலிதா தான் என்று EPS பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில், அதிமுக ஆபிஸ் பில்டிங் மட்டுமே இங்கு உள்ளது, ஆபிஸின் அதிகாரம் டெல்லியில் உள்ளது என்று கனிமொழி விமர்சித்துள்ளார். என்னதான் கர்சீப்பை வைத்து மறைத்தாலும், அது நீங்கள் (EPS) தான் என்று பட்டவர்த்தனமாக தெரிவதாகவும் சாடினார்.
News September 24, 2025
தேசிய விருதுடன் திரையுலக நட்சத்திரங்கள்

71-வது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த நடிகர் – ஷாருக்கான், சிறந்த துணை நடிகர் – எம்.எஸ் பாஸ்கர், சிறந்த துணை நடிகை – ஊர்வசி, சிறந்த இசையமைப்பாளர் – ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதை – ராம்குமார், தாதா சாகேப் பால்கே – மோகன்லால் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நட்சத்திரங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, SWIPE செய்து புகைப்படங்களை தவறாமல் பாருங்க..
News September 23, 2025
சிறுநீர் கழிக்கையில் எரிச்சல்.. காரணம் என்ன?

மனிதர்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு ஏற்படுவதற்கு சிறுநீரில் கிருமித் தொற்று, சிறுநீர் பாதையில் அடைப்பு ஆகியவை காரணமாகும். இதற்கு சிறுநீர் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து வயிற்றில் கல் இருக்கிறதா என அறிய வேண்டும். அதன் பிறகு எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை அல்லது மருந்துகள் எடுத்துக்கொண்டு சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலுக்கு தீர்வு காணலாம்.