News April 11, 2025

அண்ணாமலைக்கு ஆதரவாக களமிறங்கிய தொண்டர்கள்

image

தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அண்ணாமலை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வருகை தந்தார். அப்போது, அங்கிருந்த அண்ணாமலை ஆதரவாளர்கள், அவரே பாஜக தலைவராக தொடர வேண்டும் எனக் கூறி கோஷங்களை எழுப்பியதால், சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனக்கு ஆதரவாக கோஷமிட்டவர்களை அமைதியாக இருக்கும்படி அண்ணாமலை அறிவுறுத்தினார்.

Similar News

News April 18, 2025

10 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

இரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. இதேபோல், பெரம்பலூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

News April 18, 2025

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் RCB

image

PBKS அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், முதல் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது RCB அணி. டாஸ் வென்ற PBKS அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய RCB அணியின் வீரர்கள் சால்ட் (4), கோலி (1), லிவிங்ஸ்டன் (4) என்று அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தற்போது, RCB 4 ஓவர்களுக்கு 26-3 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

News April 18, 2025

வரலாறு படைக்க போகும் இந்திய விண்வெளி வீரர்

image

சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா செல்ல உள்ளார். நாசா, ஆக்சியோம் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு இந்த ஆண்டு அனுப்புகிறது. அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி நாட்டவருடன் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுபான்ஷு மே மாதம் செல்ல உள்ளார்.

error: Content is protected !!