News May 17, 2024
நெருக்கடியில் தவிக்கும் வோடாபோன் ஐடியா

வோடாபோன் ஐடியா நிறுவனம் பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்நிறுவனம் ₹7,674 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இது முந்தைய காலாண்டை விட 9.85% அதிகமாகும். கடந்த நிதியாண்டில் நஷ்டம் ₹6,419 கோடியாக இருந்தது. ஒட்டுமொத்தமாக கடந்த நிதியாண்டில் ₹31,238 நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.
Similar News
News December 6, 2025
புதிய கொடியை அறிமுகம் செய்தார் வைகோ

போதைப் பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல்கள் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி வைகோ ‘சமத்துவ நடைபயணம்’ மேற்கொள்கிறார். இந்நிலையில், ஜன.2-ல் திருச்சியில் தொடங்கும் இப்பயணத்துக்கான கொடியை CM ஸ்டாலின், வைகோவிடம் கொடுத்து பயணத்தை தொடங்கி வைக்கிறார். இப்பயணம் ஜன.12-ல் மதுரையில் நிறைவடைகிறது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தன்னுடன் பங்கேற்பார்கள் என்றும் வைகோ கூறியுள்ளார்.
News December 6, 2025
கோவில்பட்டியில் அரசன் பட பூஜை?

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், டிச.8-ல் கோவில்பட்டியில் பட பூஜை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பிரமாண்டமான முறையில் வடசென்னை செட் போடப்பட்டுள்ளதாம். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு காம்போ வெற்றி பெறுமா?
News December 6, 2025
படத்திற்கு சான்றளிக்கும் குழுக்களில் 50% பெண்கள்!

பாலின சமத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில், சென்சார் போர்டில் தணிக்கை மற்றும் மறுஆய்வு குழுக்களில், 50% பெண்கள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) இதை உறுதி செய்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மாநிலங்களவையில் பதிலளித்த அவர், படங்களுக்கு சான்றளிக்கும் பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


