News March 30, 2025

ஹீரோ + டைரக்டராகும் VJ சித்து!

image

VJ சித்து ஒரு படத்தை இயக்கி, அதில் அவரே நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கான புரோமோ ஷூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில், விரைவில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Similar News

News April 1, 2025

ஜடேஜாவின் வைரல் போஸ்ட்.. மீளுமா CSK

image

நடப்பு சீசனை CSK வெற்றியுடன் தொடங்கினாலும் அடுத்த 2 போட்டிகளிலும் தொடர் தோல்வி. முக்கியமாக தோனி 9வது வீரராக களமிறங்கியது பெரும் பேசுபொருளாக மாறியது. இதனிடையே தோனியுடன் களத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து விரைவில் எல்லாம் மாறும் என ஜடேஜா பதிவிட்டுள்ளார். அணியின் முக்கிய தூண்களான தோனி, ஜடேஜா சோபிக்கத் தவறியதால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 1, 2025

TNPSC Group 1 தேர்வு தேதி அறிவிப்பு

image

Group 1, 1A தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை TNPSC வெளியிட்டுள்ளது. மொத்தம் 70 பணியிடங்கள். வருவாய் கோட்டாட்சியர், டிஎஸ்பி, வணிகவரித்துறை, இணை ஆணையர் பதவிகளுக்கான Group 1, 1A தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 15ஆம் தேதி Group 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

News April 1, 2025

ஒரே வாரத்தில் சவரனுக்கு ₹2,600 உயர்ந்த தங்கம்

image

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 7 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹2,600 அதிகரித்துள்ளது. கடந்த 25ஆம் தேதி 22 கேரட் ஒரு கிராம் ₹8,185க்கும், சவரன் ₹65,480க்கும் விற்பனையானது. பின்னர் கிடுகிடுவென உயர்ந்து இன்று வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு சவரன் ₹68,080-ஐ தொட்டுள்ளது. இது தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இன்பத்தைக் கொடுத்தாலும், நடுத்தர வர்க்கத்தினரை இன்னலுக்கு ஆளாகியுள்ளது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!