News April 23, 2025
ஏஐ வீடியோவால் எரிச்சலான விஜே ரம்யா

பிரபல தொகுப்பாளரான ரம்யா, அவ்வப்போது திரைப்படங்களிலும் தலையை காட்டி வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாவில் கோபத்துடன் பதிவிட்டுள்ள அவர், ஏஐ மூலம் தனது வீடியோவை 3-வது முறையாக குரல் மாற்றம் செய்து தவறாக பயன்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனை உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் விஜே ரம்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 3, 2025
வேலூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

வேலூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 3, 2025
11 ஆண்டுகளுக்கு முன் நடந்த மர்மத்துக்கு பதில் கிடைக்குமா?

2014-ல் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள், 12 ஊழியர்களுடன் சென்ற MH370 விமானம் மாயமானது. அதில் பயணித்தவர்களின் நிலையும் தெரியாததால், தேடுதல் பணி தீவிரமாக நடந்தது. ஆனால் விமானம் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்பதால் 2017-ல் தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், விமானத்தை மீண்டும் தேட மலேசிய அரசு முடிவெடுத்துள்ளது. டிச.30-ல் தொடங்கும் இப்பணி, 55 நாள்களுக்கு நடக்கவுள்ளது.
News December 3, 2025
ஒரே இடத்தில் புயல் சின்னம்… பேய் மழை வெளுத்து வாங்கும்

இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டை IMD விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளதால், இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையும், திமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, தேனி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.


