News February 25, 2025
விவேக் ராமசாமியின் அடுத்த டார்கெட்

ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். டிரம்ப் அரசில் அரசாங்க திறன் துறை (DOGE) பொறுப்பில் இருந்து விலகிய சில நாள்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், இதற்கான பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். தொழில் தொடங்குவது, தொழில் வளர்ச்சிக்கும் நாட்டிலேயே சிறந்த மாகாணமாக ஓஹியோவை மாற்றுவேன் என அவர் உறுதியளித்துள்ளார்.
Similar News
News February 25, 2025
மனைவியை விவாகரத்து செய்கிறார் கோவிந்தா

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவும், அவரின் மனைவி சுனிதா அகுஜாவும் விவாகரத்து பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 பேருக்கும் 37 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அண்மைக்காலமாக 2 பேருக்கும் வாக்குவாதம், சண்டைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் 2 பேரும் தனித்தனியே வசித்து வந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக விரைவில் விவாகரத்து பெற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News February 25, 2025
3 ஓவர்களில் சதமா..! மரண ரெக்கார்ட்

கிரிக்கெட்டின் ஜாம்பவான் எனக் கொண்டாடப்படும் ஆஸி.யின் டான் பிராட்மேனின் நினைவு நாள் இன்று. 3 ஓவர்களில் அவர் சதம் அடித்ததைக் குறித்து தெரியுமா? 1931ல் உள்ளூர் போட்டி ஒன்றில் அவர் இச்சாதனையை படைத்துள்ளார். அப்போதெல்லாம், ஒரு ஓவருக்கு 8 பந்துகள் வீசப்படும். பிராட்மேன் முதல் ஓவரில் 33 ரன்கள், 2வது ஓவரில் 40 ரன்கள், 3வது ஓவரில் 27 ரன்களை விளாசினார். வெறும் 24 பந்துகளில் அவர் சதம் விளாசி இருக்கிறார்.
News February 25, 2025
SPAM கால் என நினைத்து வேலையை இழந்த இளைஞர்

Reddit யூசரோட மொபைலுக்கு வெளிநாட்டு கால் ஒன்னு வந்திருக்கு. மோசடி, spam அழைப்பா இருக்கலாம்னு நினைச்சு அத எடுக்காம விட்டுட்டாரு. வேறொரு நாள் ட்ரூ காலர்ல அந்த நம்பர போட்டு பார்த்தப்ப தான் பதறிப் போனாரு. காரணம் அது அமெரிக்காவுல இருக்குற அமேசான் நிறுவனத்துல இருந்து ஜாப் ஆஃபரா வந்த கால். திரும்ப அந்த நம்பர கான்டாக்ட் பண்ணப்ப நோ யூஸ். வட போச்சேன்னு அப்செட்ல இருக்காரு.