News April 2, 2024
விமானிகள் இல்லாமல் தவிக்கும் விஸ்தாரா

விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் இல்லாமல் விஸ்தாரா நிறுவனம் நேற்று மட்டும் 50 விமானங்களை ரத்து செய்துள்ளது. பல விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர். இன்றும் 37 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா உடன் விஸ்தாராவை இணைக்கும் முயற்சி நடந்து வருகிறது. இருப்பினும், தினந்தோறும் நிலைமை மோசமடைவதால் தினசரி ரிப்போர்ட் தருமாறு டிஜிசிஏ கேட்டுள்ளது.
Similar News
News January 3, 2026
கோயிலில் மதவெறியை வளர்க்கக் கூடாது: சேகர்பாபு

கன்னியாகுமரி கோயில் நிகழ்ச்சியில் அமைச்சர் <<18742042>>சேகர்பாபு<<>> பக்தர்களை திட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், அமைதி காக்கும் இடத்தில் மனிதநேயத்தை வளர்க்க வேண்டும், மதவெறியை வளர்க்கக் கூடாது என சேகர்பாபு தெரிவித்துள்ளார். பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தை கோயிலுக்கு வெளியே சொல்லட்டும் எனவும், ஆன்மிகமும், பக்தியும் அறத்தைதான் உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 3, 2026
‘அரசன்’ படத்தில் 3 கெட்டப்களில் நடிக்கும் சிம்பு!

அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 11 நாள்களாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு, சென்னையில் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளதாகவும், 1980, 1992, 1995 காலகட்டங்களில் கதை நிகழ்வதால், சிம்பு 3 கெட்டப்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மதுரையைச் சேர்ந்த கபடி வீரர் ஒருவர், சென்னையில் கேங்ஸ்டராக மாறுவதை சுற்றி கதை நகர்வதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 3, 2026
ராசி பலன்கள் (03.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


