News November 11, 2024

முடிவுக்கு வந்தது விஸ்தாரா விமான சேவை!

image

விஸ்தாரா விமானங்கள் கடைசி நாளாக இன்று வானில் பறந்து வருகின்றன. ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடா குழுமம் வாங்கிய நிலையில், விஸ்தாரா நிறுவனத்தை ஏர் இந்தியாவுடன் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. 2022 முதலே இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் விஸ்தாரா விமான டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. நாளை முதல் விஸ்தாரா விமானங்கள் ஏர் இந்தியா பெயரில் இயக்கப்படவுள்ளன.

Similar News

News August 5, 2025

சிவகார்த்திகேயனின் இந்த ஒரு ஆசை நிறைவேறுமா?

image

ஒரு படம் வெற்றி அடைந்த பிறகு, அதை 2ம் பாகமாக எடுத்து, அதில் நடிக்க தனக்கு எப்போதும் பயமாக இருக்கும் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஆனால், ‘மாவீரன்’ படத்தில் மட்டும் 2ம் பாகத்தில் நடிக்க வேண்டும் என ஆசை இருப்பதாகவும், அப்படி ஒரு தனித்துவமான கதை அதில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார்.

News August 5, 2025

80% குணமாகும் கேன்சர் தடுப்பூசி இலவசம்!

image

கேன்சருக்கான தடுப்பூசியை மேம்படுத்தி வருவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கேன்சர் செல்களை கண்டறிந்து தேடி கொல்லும் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்திக்கு பயிற்சி அளிக்கும் வகையில் தடுப்பூசி மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. பரிசோதனையில் 75-80% வரை கேன்சர் குணமாவதாகவும், விரைவில் நாடு முழுக்க பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

News August 5, 2025

மோடி ஆட்சியில் 17 கோடி வேலைவாய்ப்பு: அமைச்சர்

image

கடந்த 10 ஆண்டுகளில் 17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கடந்த 16 மாதங்களில் மட்டும் 11 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், முந்தைய UPA ஆட்சிகாலத்தில் வெறும் 3 கோடி வேலைவாய்ப்புகள் மட்டும் தான் உருவாக்கப்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!