News June 28, 2024
எதிர்க்கட்சி போல விசிக செயல்படுகிறது: ரவிக்குமார்

விஷச்சாராய விவகாரத்தில், திமுக கூட்டணியில் உள்ள விசிக உள்ளிட்ட கட்சிகளும் அநீதிக்குத் துணைபோவதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அக்கட்சியின் எம்.பி., ரவிக்குமார், 64 பேரின் சாவில், இபிஎஸ் கீழ்த்தரமான அரசியல் செய்வது சரி கிடையாது என்றார். எங்களைப் பொறுத்தவரை கூட்டணியில் இருந்தாலும், அரசைக் போராட்ட நடத்தி, எதிர்க்கட்சி போன்று செயல்படுவதாகத் தெரிவித்தார்.
Similar News
News December 12, 2025
நானாவது கொஞ்ச நேரம் நின்றிருக்க வேண்டும்: SKY

எப்போதும் அபிஷேக் சர்மாவை நம்பி இருக்க முடியாது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். SA உடனான 2-அவது டி20 தோல்விக்கு பின்னர் பேசிய அவர் தானும், கில்லும் ரன்கள் சேர்த்து இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், கில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததால், நானாவது கொஞ்ச நேரம் களத்தில் நின்று ரன்களை சேர்த்திருக்க வேண்டும். இருப்பினும் இந்த தோல்வி ஒரு பாடமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
‘வா வாத்தியார்’ இன்று ரிலீசாகாது

‘வா வாத்தியார்’ படம் இன்று வெளியாகாது என தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் அறிவித்துள்ளது. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், பிரச்னையை சரிசெய்ய தீவிரமாக வேலை செய்து வருகிறோம், விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, கடன் பாக்கியை திருப்பி செலுத்தும் வரை <<18527361>>இப்படத்தை<<>> ரிலீஸ் செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்திருந்தது.
News December 12, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 12, கார்த்திகை 26 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 1:45 PM – 2:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 AM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.


