News September 15, 2024
கொடி விவகாரம்: விசிகவுக்கு அதிமுக ஆதரவு

மதுரையில் விசிக கொடி அகற்றப்பட்ட விவகாரத்தில், விசிகவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் பேசிய போது, கொடியை கூட ஏற்ற முடியாத நிலை தமிழ்நாட்டில் உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். விசிக வீடியோ விவகாரம் குறித்த கேள்விக்கு, இந்த பதிவு மூலம் திமுக மீது திருமாவளவன் கடும் அதிருப்தியை வெளியிட்டு உள்ளதாக சாடினார். 2 கட்சிகளும் கூட்டணி அமைக்குமா? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News November 8, 2025
BREAKING: கூட்டணியில் இருந்து விலக முடிவா?

2026 தேர்தல் கூட்டணி தொடர்பாக BJP-க்கு மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உளவுத்துறையின் சர்வேவில் ADMK-TVK கூட்டணி வைத்தால் கண்டிப்பாக திமுக வீழ்த்தப்படும் என தெரியவந்துள்ளதாம். BJP-ஐ காரணம் காட்டி கூட்டணியில் சேர விஜய் மறுப்பதால், சில தியாகங்களை செய்ய டெல்லி தலைமை முன்வந்துள்ளதாம். அதன்படி, கூட்டணியில் இருந்து விலகினால் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி BJP தலைமை யோசிக்கிறதாம்.
News November 8, 2025
தெருநாய்கள் விவகாரம்.. SC-ன் உத்தரவு மோசம்: மேனகா காந்தி

தெருநாய்கள் விவகாரத்தில்<<18224676>> SC பிறப்பித்த<<>> உத்தரவை மோசம் என்று மேனகா காந்தி விமர்சித்துள்ளார். SC-ன் உத்தரவை செயல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக கூறியுள்ள மேனகா காந்தி, ஒருவேளை 5,000 நாய்களை அகற்றினால் அவற்றை தங்க வைக்க ஏது காப்பகங்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் 8 லட்சம் தெருநாய்கள் உள்ள நிலையில், 5,000 நாய்களை அகற்றுவதால் என்ன மாற்றம் ஏற்படக் போகிறது என்றும் வினவியுள்ளார்.
News November 8, 2025
காலை உடற்பயிற்சியின் நன்மைகள்

காலை உடற்பயிற்சி உங்களது நாளை எப்படி மாற்றும் என்று தெரியுமா? காலை நேரம் தனித்துவம் கொண்டது. சுறுசுறுப்பு, மன தெளிவு, ஞாபக சக்தி ஆகியவற்றை அதிகரிக்கிறது. உற்சாகமான நாளை அனுபவிக்க, காலை நேர உடற்பயிற்சியின் நன்மைகள் என்னவென்று, மேலே உள்ள போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க


