News October 22, 2024
விஷாலின் துப்பறிவாளன்- 2.. புது அப்டேட்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2017இல் வெளியான துப்பறிவாளன் வெற்றி பெற்றது. இதையடுத்து, அப்படத்தின் 2ஆவது பாகத்தை மிஷ்கின் மீண்டும் இயக்கினார். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மிஷ்கின் விலகவே, விஷாலே இயக்குவதாக அறிவித்தார். அதன்பிறகு எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில், திரைக்கதையில் சில மாற்றம் செய்து டிசம்பரில் படப்பிடிப்பை விஷால் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News July 6, 2025
ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என்பதை அறிய…

ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என்பதை அறிய ●அறையிலுள்ள விளக்குகளை அணைத்து, சின்னதாக LED லைட்டின் வெளிச்சம் எங்காவது தெரிகிறதா என கவனியுங்க ●உங்கள் விரலுக்கும் கண்ணாடியில் தெரியும் விரலின் பிரதிபலிப்புக்கும் இடையில் எந்த இடைவெளியும் இல்லை என்றால், அந்த கண்ணாடியை நன்றாக செக் பண்ணுங்க ●கேமரா கண்டுபிடிப்பு செயலிகளைப் பயன்படுத்தி, போனின் கேமரா & சென்சார் மூலம் கண்டுபிடிக்கலாம். SHARE IT.
News July 6, 2025
தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திருவிழாவையொட்டி நாளை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். இதனால், மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் நாளை இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். TNSTC சிறப்பு பஸ்களையும் அறிவித்துள்ளது.
News July 6, 2025
‘கில்’ இந்தி பட ரிமேக்கில் துருவ் விக்ரம்!

‘பைசன்’ படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் இந்தியில் வெளிவந்து பெரிய ஹிட்டடித்த ‘கில்’ படத்தின் ரிமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா என்பவர் இயக்க இருக்கிறார். ஒரு நாள் இரவில், ரயில் ஒன்றில் கொள்ளையர்களிடம் இருந்து ராணுவ அதிகாரி ஒருவர் பயணிகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.