News August 15, 2024
வைரஸ் பரவல்: WHO அவசரநிலை பிரகடனம்

ஆப்பிரிக்கா கண்டத்தில் Mpox தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் (WHO) அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளது. காங்கோவில் பரவிய தொற்று, அண்டை நாடுகளான கென்யா, உகாண்டா உள்ளிட்ட 13 நாடுகளுக்கும் 13 நாடுகளிலும் பரவி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 2ஆவது முறையாக இத்தொற்று பரவி வருகிறது. இதனால் தற்போது வரை 517 பேர் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல், சீழ் நிறைந்த புண்கள் இதன் அறிகுறிகளாகும்.
Similar News
News August 16, 2025
ஆஸி., கிரிக்கெட் ஜாம்பவான் காலமானார்

ஆஸி., அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனும், முதல் முழுநேர பயிற்சியாளருமான பாப் சிம்ப்சன் (89) காலமானார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கேப்டனாக பணியாற்றிய அவர், ஆஸி.,யின் தலைசிறந்த ஓபனர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். சிறந்த ஸ்லிப் ஃபீல்டர்களில் ஒருவராக இருந்த அவர், முதல் தர கிரிக்கெட்டில் 21,029 ரன்கள் குவித்ததுடன் தனது லெக் ஸ்பின் மூலம் 349 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
News August 16, 2025
ராமதாஸ் வழிகாட்டி மட்டுமே: கே.பாலு

பொதுக்குழுவை கூட்ட அன்புமணிக்கு உரிமை இல்லை என ராமதாஸ் கூறியிருந்தார். ஆனால், கட்சியின் 34 விதிகளிலும் அப்படியான எதுவும் இல்லை என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.பாலு தெரிவித்துள்ளார். அத்துடன், கட்சியின் நிறுவனர் வழிகாட்டி மட்டுமே, அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் பாலு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். இதனிடையே, ராமதாஸின் மனைவி சரஸ்வதி பிறந்தநாளில் தந்தை-மகன் சந்தித்துள்ளனர்.
News August 16, 2025
இன்று National Work From Home Wellness Day!

வீட்டில் உட்கார்ந்தபடியே வேலை செய்வதால் வரும் பாதிப்புகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினம் இன்று. வீட்டிலிருந்து வேலை செய்வது சுகம்தான் என்றாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால், உடலும் மனமும் சோர்ந்து போகும். ஆகவே, வேலையின் இடையே சிறிது நேரம் நடைபயிற்சி செய்யுங்கள், நன்றாக தண்ணீர் குடியுங்கள், வீட்டில் உள்ளவர்களிடம் சிரித்து பேசுங்கள். உங்களுக்கு Work From home பிடிக்குமா?