News March 17, 2024
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் C-VIGIL என்ற தொலைபேசி செயலி மூலம் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என தெரிவித்தார்.
Similar News
News January 18, 2026
சாத்தூர்: ரயிலில் பாய்ந்து இளைஞர் தற்கொலை

சிவகாசி பள்ளப்பட்டி சாலையை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா(23). கூலி வேலை செய்து வரும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனை இவரது பாட்டி கண்டித்ததால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் ராஜா சாத்தூர் ரயில் நிலையம் அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 18, 2026
விருதுநகர்: 10th போதும்., மத்திய அரசு வேலை ரெடி!

விருதுநகர் மக்களே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) காலியாக உள்ள 173 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-50 வயதுக்குட்பட்ட 10th, 12th, ITI, டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 30க்குள் இங்கு<
News January 18, 2026
சாத்தூர்: சப்-சன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் அருண்குமார். கடந்த மாதம் வீட்டில் உள்ள அறையில் தூக்கில் இவரது மனைவி இளவரசியின் உடல் மீட்கப்பட்டது. இளவரசியின் பெற்றோர் தங்களது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் டிஐஜி அபிநவ்குமார் சப்-சன்ஸ்பெக்டர் அருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


