News April 26, 2024
விராட் கோலியின் ஆமை வேக ஆட்டம்

நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஆமை வேக பேட்டிங் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. நேற்றைய போட்டியில் கோலி 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்தார். சக வீரரான பட்டிதார் 20 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இதனை விமர்சித்திருக்கும் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், இப்படியான சாதாரண ஆட்டத்தை கோலியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். உங்களது கருத்து என்ன?
Similar News
News February 7, 2026
பாமக வந்தால் விசிக விலகும்: திருமாவளவன் திட்டவட்டம்

திமுக கூட்டணிக்கு ராமதாஸ் தரப்பு பாமக வந்தால், கூட்டணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக தனியார் TV நேர்காணலில் திருமாவளவன் கூறியுள்ளார். சாதியின் அடிப்படையிலான வெறுப்பு அரசியலை பாமக பரப்புவதாக கூறிய அவர், பிளவு அரசியல் செய்பவர்களுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு, கூட்டணி விவகாரத்தில் திமுகவின் முடிவில் விசிக தலையிடாது என பேசியிருந்தார்.
News February 7, 2026
ஆபாச படம் பார்க்கிறீர்களா.. 7 ஆண்டு சிறை உறுதி

ஸ்மார்ட் போன்களை வாழ்வின் ஒரு அங்கமாகவே கொண்டுள்ள இன்றைய உலகில் பலரும் பாலியல் வீடியோக்களுக்கு அடிமைகளாக உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. சிறார் பாலியல் வீடியோக்கள் (Child Videos) பார்ப்பதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனராம். இதனை பார்த்தால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ₹10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்பதை மறவாதீர்கள். இம்மாதிரியான தேடுதல் போலீஸாரால் கண்காணிக்கப்படுவதையும் நினைவில் கொள்ளுங்கள்.
News February 7, 2026
ஜெ., பாணியில் ஜாதகத்தை கேட்கிறாரா விஜய்?

விருப்ப மனுவுடன் வேட்பாளர்களின் ஜாதகத்தையும் தவெக சேர்த்து வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதவ் மூலம் அறிமுகமான பெங்களூரு ஜோசியர் மீது விஜய்க்கு பெருத்த நம்பிக்கை வந்துள்ளதால், அவரது அறிவுறுத்தலின்படி வேட்பாளர்களை தேர்வு செய்ய விஜய் திட்டமிட்டுள்ளாராம். 2009 தேர்தலில் வேட்பாளர்களின் ஜாதகத்தையும் ஜெ., கேட்டிருந்ததாக கூறப்படுவதால், அதே ஃபார்முலாவை விஜய் ஃபாலோ செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


