News May 19, 2024
கேப்டன் டுப்ளசிக்கு முத்தமிட்ட விராட் கோலி

சென்னை அணியை வீழ்த்தி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு அணியின் கேப்டன் டுப்ளசியை நட்சத்திர வீரர் விராட் கோலி முத்தமிட்டார். சாண்ட்னரின் கேட்ச்சை டுப்ளசி அசாத்தியமாக பிடித்த பின்னர் ஓடிவந்த கோலி, முதுகின் மேல் ஏறிக் கொண்டு முத்தமிட்டார். இந்த நிகழ்வு காண்போரை உருக வைத்தது. பின்னர், போட்டி முடிந்தபின் தனது மனைவி அனுஷ்காவுக்கு ப்ளேன் கிஸ் பறக்கவிட்டார் கோலி.
Similar News
News March 7, 2026
FLASH: தங்கம் விலை சரசரவென குறைந்தது

<<19317958>>தங்கம் விலை<<>> 6 நாள்களுக்கு பின், இன்று அதிகரித்துள்ளது. ஆனாலும், இந்த வார வர்த்தகம் நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியாகவே அமைந்திருக்கிறது. போர்ச் சூழலுக்கு நடுவிலும் 22 கேரட் தங்கம் ₹5,800 குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் ₹1,26,200-க்கு விற்பனையான 1 சவரன் தங்கம், தற்போது ₹1,20,400-க்கு விற்கப்பட்டு வருகிறது. இதேபோல், வெள்ளி விலையும் கிலோவுக்கு ₹35,000 சரிந்து ₹2.90 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
News March 7, 2026
கோடை காலத்திற்கு ஏற்ற கலர் எது தெரியுமா?

கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. கோடைக்காலத்தில் குறைந்த வெப்பத்தை உறிஞ்சும் நிறங்களில் ஆடைகள் அணிந்தால், கோடை வெயிலில் இருந்து தப்பிக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். வெள்ளை, வெளிர் நீலம், வெளிர் சாம்பல், மென்மையான இளஞ்சிவப்பு, வெளிர் பச்சை, லாவெண்டர், பவுடர் நீலம், கிரீம் போன்ற வண்ணங்களில் ஆடைகளை அணியலாம். கருப்பு நிறம் அதிகளவில் வெயிலை உறிஞ்சும் என்பதால் இதை தவிர்ப்பது நல்லது.
News March 7, 2026
விஜய் இப்படிப்பட்டவரா.. சங்கீதாவால் பரபரப்பு

சங்கீதா விவாகரத்து கோரிய பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் அவர் <<19319427>>புதிய மனுவை<<>> தாக்கல் செய்திருப்பதுதான் இன்றைய ஹாட் டாபிக். அதில், மேலும் பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை சங்கீதா முன்வைத்துள்ளார். விஜய்யின் அரசியல் சூழல் கருதி பலமுறை சுமுகமாக விவாகரத்து பெற முயற்சி செய்ததாக குறிப்பிட்டுள்ள அவர், விஜய் பிரிந்து செல்ல மறுத்து வழக்கறிஞர் மூலம் மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.


