News June 27, 2024
தொடர்ந்து தடுமாறும் விராட் கோலி

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வீரர் விராட் கோலி தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடி வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இன்றைய அரையிறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 ரன்னில் ஆட்டமிழந்தார். கோலி தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
Similar News
News December 5, 2025
550 விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்ட இண்டிகோ

புதிய விமானப் பணிநேர வரம்பு விதிகளை, பின்பற்றிட இண்டிகோவிடம் போதிய விமானிகள் இல்லை என கூறப்படுகிறது. இதனால், நேற்று 550 விமானங்களின் சேவையை இண்டிகோ ரத்து செய்தது. இதற்காக விமானப் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ள இண்டிகோ, இப்பிரச்னையை சரிசெய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், பிப்.10 வரை விதிகளில் இருந்து தளர்வு கோர இண்டிகோ முடிவெடுத்துள்ளது.
News December 5, 2025
டிசம்பர் 5: வரலாற்றில் இன்று

*1896–சென்னை கன்னிமாரா நூலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி *1905–அரசியல்வாதி ஷேக் அப்துல்லா பிறந்தநாள் *1930–அரசியல்வாதி எஸ்.டி.சோமசுந்தரம் பிறந்தநாள் *1954–எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு நாள் *1960–நடிகை சரிகா பிறந்தநாள் *1980–நடிகர் சுருளி ராஜன் நினைவு நாள் *2006–கொலை வழக்கில் சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு *2013–நெல்சன் மண்டேலா நினைவு நாள் *2016–முன்னாள் CM ஜெ.ஜெயலலிதா நினைவு நாள்
News December 5, 2025
1975-ல் டாலருக்கு நிகரான ₹ மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத அளவுக்கு ₹90.43 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. 1975-ல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹8.97 ஆக இருந்துள்ளது. 2010-ல் ரூபாயின் மதிப்பு ₹44.64 ஆக இருந்த நிலையில், அடுத்த 15 வருடங்களில் அது இரட்டிப்பாகி தற்போது ₹90.05 ஆக உள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம், அமெரிக்க-இந்திய வர்த்தக உறவில் பிரச்னை ஆகியவை இதற்கான காரணங்களாக உள்ளன.


