News June 21, 2024
விராட் கோலி ஒரு சுயநலவாதி: முகமது ஹபீஸ்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை சுயநலவாதி என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் காட்டமாக விமர்சித்துள்ளார். தனிப்பட்ட சாதனைகளுக்காக அணியின் நலன்களில் விராட் கோலி சமரசம் செய்வதாகக் கூறிய அவர், 2023 ODI உலகக் கோப்பை தொடரில் SA அணிக்கு எதிரான போட்டியில், சதம் விளாசும் வரை பெரிய ஷாட்களை அடிக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
Similar News
News September 12, 2025
ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்

விழுப்புரம், திண்டிவனத்தில் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்திற்கு ராமதாஸின் ஆதரவாளர்கள் பூட்டு போட முயன்றதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அன்புமணியை கட்சியில் இருந்து நேற்று ராமதாஸ் நீக்கிய நிலையில், வரும் 17-ம் தேதி இந்த அலுவலகத்தில் அன்புமணி கொடியேற்ற திட்டமிட்டிருந்தார்.
News September 12, 2025
அட! PAN Card எண்ணுக்கு இதுதான் அர்த்தமா..

PAN CARD-ல் வரும் முதல் 3 எழுத்துகள் தானியங்கி முறையில் உருவாக்கப்படும். ➤இதில் வரும் 4வது எழுத்து ’P’ என்றால் அது தனிநபருடைய கார்டு எனவும், ’C’ என்றால் நிறுவனத்தின் கார்டு எனவும் அர்த்தம். ➤உங்கள் பெயரின் முதல் எழுத்து 5வது எழுத்தாக இடம்பெறுகிறது. ➤அடுத்து வரும் 4 எண்கள் சீரியல் எண்களாகும். ➤இறுதியாக வரும் எழுத்து, ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும் தனித்துவமான எழுத்தாகும். SHARE.
News September 12, 2025
விஜயவாடாவில் இன்று ‘WAY2NEWS Conclave’

விஜயவாடாவில் இன்று ‘WAY2NEWS Conclave’ நடைபெறுகிறது. இதில், ஆந்திர CM சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, MP-க்கள் பரத், ஹரீஷ் பாலயோகி, YSR காங்., தலைவர்கள் ஷஜாலா ராமகிருஷ்ணா ரெட்டி, புகானா ராஜேந்திரநாத் ரெட்டி ஆகியோர் பங்கேற்கின்றனர். பிற்பகல் 12 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான AP வளர்ச்சி குறித்து தலைவர்கள் பேச உள்ளதால், பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.