News March 4, 2025
புதிய சாதனைக்கு ரெடியாகும் விராட் கோலி!

ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, ஏராளமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். தற்போது மேலும் ஒரு சாதனை படைக்க அவர் காத்திருக்கிறார். இன்றைய போட்டியில் 40 ரன்கள் எடுத்தால் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற சாதனை கோலி வசமாகும். இதுவரை 16 போட்டிகளில் 662 ரன்கள் குவித்துள்ளார் விராட். பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தவான் 10 போட்டிகளில் 701 ரன்கள் குவித்திருக்கிறார்.
Similar News
News March 4, 2025
4 நாள்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: IMD

மாநிலத்தில் இன்று முதல் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2–3°C அதிகமாக இருக்கக்கூடும் என IMD கணித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. தொடர்ந்து, மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். எனவே, குழந்தைகள், முதியோர்கள் மதியம் 12 – 3 மணி வரை வெயிலில் வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளது.
News March 4, 2025
மாதவிடாய் வலியை போக்க சூப்பர் டிப்ஸ்!

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியையும், மன உளைச்சலையும் போக்க சில பழங்களை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். வாழை, பப்பாளி, அன்னாசி, தர்பூசணி, ஆரஞ்சு ஆகிய பழங்கள்தான் அவை. வாழைப்பழத்தின் மெக்னீசியம், மாதவிடாய் வலியின் தீவிரத்தை குறைக்கிறது. பப்பாளியின் விட்டமின் A, ஹார்மோன் சமநிலையை காக்கிறது. ஆப்பிளின் நார்ச்சத்தும், இரும்பு சத்தும் சோர்வு, மனநிலை மாற்றத்தை போக்குகிறது.
News March 4, 2025
அமெரிக்க பொருட்களுக்கு வரியை உயர்த்திய சீனா

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயம், உணவுப் பொருட்களுக்கு, சீனா புதிதாக 10% – 15% வரை வரி விதித்துள்ளது. முன்னதாக சீன பொருட்களுக்கான வரியை 10%இல் இருந்து 20% ஆக USA உயர்த்தியதால் இந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. USA அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு தடாலடியான முடிவுகளை எடுத்து வருகிறார். இதனால் வர்த்தகப் போர் மூளும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.