News May 22, 2024
8000 ரன்களை கடந்தார் விராட் கோலி

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 8,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை RCB வீரர் விராட் கோலி படைத்துள்ளார். 2024 IPL சீசனில் இன்று RR-RCB அணிகள் எலிமினேட்டர் சுற்றில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் 29 ரன்களை எடுத்ததன் மூலம், 8000 ரன்களை கடந்து கோலி சாதித்துள்ளார். முன்னதாக, நடப்பு IPL சீசனில் அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு கோப்பையையும், கோலி தனது வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 15, 2025
ஹோட்டல் ரூமில் ரகசிய கேமரா இருக்கான்னு தெரியணுமா?

வெளியூர்களுக்கு செல்லும் போது ஹோட்டல்களில் தங்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அப்படி தங்கியிருக்கும் அறையில் ஏதாவது கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டு இருக்குமா என்ற ஒருவித பயத்துடனே தங்க வேண்டியுள்ளது. எனவே அடுத்த முறை ஹோட்டல் அறையில் தங்க நேரும் போது அந்த அறை பாதுகாப்பானதா என்பதை சில டிரிக்குகள் மூலம் அறிந்துகொள்ளலாம். டிரிக்குகளை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மேலே Swipe செய்து பாருங்கள்.
News September 15, 2025
விஜய்யின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: வைகோ

விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திரையில் முன்னணி நட்சத்திரமாக இருப்பதாக, அவரை காண மக்கள் கூடுவதாகவும், ஆனால் தேர்தல் களத்தில் அது எடுபடாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தங்களது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை தடுக்கும் சக்தியை விஜய்யால் ஏற்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
ITR தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு? IT விளக்கம்

ITR தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை வருமான வரித்துறை மறுத்துள்ளது. இது முற்றிலும் வதந்தி எனவும், ITR தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதையும் வருமான வரித்துறை உறுதி செய்துள்ளது. முன்னதாக, வரும் 30-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியானது. நாடு முழுவதும் இதுவரை 6 கோடிக்கும் அதிகமானோர் ITR தாக்கல் செய்துள்ளனர்.