News March 18, 2024
வீடியோ காலில் வாழ்த்து கூறிய விராட் கோலி!

WPL இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. கோப்பை வென்று அசத்திய பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு, ஆடவர் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பெங்களூரு நகரின் பல்வேறு தெருக்களிலும் வெற்றி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
Similar News
News December 31, 2025
2026-ல் இந்தியா, பாக்., இடையே போர்?

2026-ல் IND, PAK இடையே மோதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக US-ஐ சேர்ந்த ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இது PAK-ல் அதிகரிக்கும் பயங்கரவாத செயல்களால் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரும், பதட்டம் நிலவுவதற்கான காரணமாக கூறப்படுகிறது. இருநாடுகளும் ஆயுதக் குவிப்பை துரிதப்படுத்துவது கவலைக்குரிய விஷயம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 31, 2025
டிசம்பர் 31: வரலாற்றில் இன்று

*1600 – கிழக்கு இந்திய கம்பெனி தொடக்கம்
*1910 – நாடக கலைஞர் டி.எஸ்.துரைராஜ் பிறந்தநாள்
*1984 – ராஜீவ் காந்தி இந்திய பிரதமரானார்
*1989 – நடிகை பிரியா பவானி சங்கர் பிறந்தநாள்
*1999 – 3 தீவிரவாதிகள் விடுக்கப்பட்டதை அடுத்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814-ல் இருந்த 190 பணயக்கைதிகள் மீட்பு
News December 31, 2025
குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: EPS

அதிமுகவில் கடுமையாக உழைப்பவர்களுக்கு வீடு தேடி வந்து பதவி தரப்படும் என EPS தெரிவித்துள்ளார். திமுகவை ஒரு கார்ப்பரேட் கம்பெனி என சாடிய அவர், அக்கட்சியில் கருணாநிதி குடும்பத்துக்கு மட்டுமே ஆட்சி அதிகாரம் கிடைக்கும் என கூறியுள்ளார். கருணாநிதியின் குடும்பம் 8 கோடி மக்களை சுரண்டி வாழ்வதாகவும், அவர்களது குடும்ப ஆட்சி மற்றும் வாரிசு அரசியலுக்கு 2026 தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பேசியுள்ளார்.


