News March 18, 2024
பெங்களூரு வந்தடைந்தார் விராட் கோலி

2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக RCB அணி வீரர் விராட் கோலி பெங்களூரு வந்தடைந்தார். சமீபத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்த அவர், ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நேற்று இந்தியா திரும்பினார் கோலி. ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கோலி அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.
Similar News
News December 7, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (டிச. 07) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News December 7, 2025
புதுசா இருக்குண்ணே.. விரைவில் பராசக்தி கண்காட்சி?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் ஆடியோ லாஞ்ச், ஜன., முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாம். இந்நிலையில், இப்படத்திற்காக உருவாக்கப்பட்ட 1960 காலகட்ட பொருட்களின் மாதிரிகளை கண்காட்சியாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘தி வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’ என்ற பெயரில், டிச.16 முதல் ஒரு வாரத்துக்கு கண்காட்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
News December 7, 2025
நாளை பள்ளிகளுக்கு இங்கு விடுமுறை

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை(டிச.8) காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்துள்ளார். இதனிடையே, டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கும் நாளை விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்த விவரங்களை அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.


