News April 28, 2025
விராட் 50, க்ருனால் 50, பார்ட்னர்ஷிப் 100

DC அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி & க்ருனால் பாண்டியாவின் பார்ட்னர்ஷிப், RCB அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. 163 என்ற இலக்கை துரத்த களமிறங்கிய RCB அணியின் படிக்கல் 0, பட்டிதார் 6, பெத்தெல் 12 என அவுட் ஆகினர். இருப்பினும் கோலி & க்ருனாலின் நிதானமான ஆட்டம் RCB-ஐ வெற்றியை நோக்கி நகர வைத்திருக்கிறது.
Similar News
News December 9, 2025
கோவா தீ விபத்து: இண்டர்போல் உதவியை நாடும் போலீஸ்

கோவா <<18500834>>இரவு விடுதி தீ விபத்தில்<<>> 25 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து நடந்த சில மணி நேரத்தில் விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்து தப்பியோடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தப்பியோடிய கௌரவ் மற்றும் சவுரப்பை பிடிக்க, இண்டர்போல் உதவியை போலீசார் நாடியுள்ளனர். இதற்கிடையே, இவர்களுக்கு சொந்தமான இன்னொரு விடுதி ஒன்று, அரசு நிலத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
News December 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 544 ▶குறள்: குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. ▶பொருள்: குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.
News December 9, 2025
₹2.43 கோடியை வேண்டாம் என்று சொன்ன வீராங்கனை

ஓய்வு பெற்ற ஃபிரெஞ்சு டென்னிஸ் வீராங்கனை கரோலின் கார்சியா (32), தனது யூடியூப் சேனலில் டென்னிஸ் வீரர்களின் பேட்டிகளை வெளியிட்டு வருகிறார். அவரது சேனலுக்கு, சூதாட்ட நிறுவனம் ஒன்று ₹2.43 கோடி ஸ்பான்சர்ஷிப் செய்ய முன்வந்துள்ளது. ஆனால், அதை மறுத்து, பணத்தை விட தனது நோக்கம் மதிப்புமிக்கது என தெரிவித்துள்ளார். மேலும், டென்னிஸ் சார்ந்த ஆரோக்கியமான வீடியோக்களை தொடர்ந்து பதிவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.


