News September 23, 2025
இந்தியாவில் பரவும் வைரஸ் காய்ச்சல்.. அறிகுறிகள் என்ன?

இந்தியாவில் H3N2 வைரஸ் பரவலால் பலரும் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். உடல் வலி, சோர்வு, வறண்ட தொண்டை, தலைவலி, ஜலதோஷம், காய்ச்சல் இதன் அறிகுறிகளாகும். H3N2 வைரஸால் நீங்கள் பாதிக்கப்பட்டால் அதிகமாக தண்ணீர் குடிக்கவும், போதுமான நேரம் தூங்குங்கள், வெளியே செல்லாதீர்கள். மேற்கண்ட அறிகுறிகள் உள்ள குழந்தைகள், முதியவர்கள் டாக்டரை உடனடியாக அணுகி ஆலோசனை பெற்று மருந்து மாத்திரை சாப்பிடவும்.
Similar News
News September 23, 2025
கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

* ஓசூர் வார்டு 10 – அலசநத்தம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
* ஓசூர் வார்டு 21, 22 -பழைய ஏஎஸ்டிசி ஹட்டோ, விஜய் வித்யாஷ்ரமம் பள்ளி
* கிருஷ்ணகிரி – வார்டு 18, 19 தர்மராஜா கோவில் தெரு, பாத்திமா சமுதாயக்கூடம்
* கிருஷ்ணகிரி – பெத்ததாளப்பள்ளி, கொண்டேப்பள்ளி வட்டார பயிற்சி அலுவலகம்
* காவேரிப்பட்டினம் – திம்மாபுரம் அரசினர் உயர்நிலைபள்ளி.
* சூளகிரி – மருதாண்டபள்ளி, கோனேரிபள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. ஷேர்
News September 23, 2025
நரம்பு மண்டலத்திற்கு வலுசேர்க்கும் மூலிகை தேநீர்!

வாய்ப்புண், வயிற்றுப் புண்களை ஆற்றவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்த வல்லாரை கீரை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ➱வல்லாரை கீரை இலைகளை கழுவி, தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும் ➱மிதமான தீயில், 2- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, வடிகட்டி எடுக்கவும். ➱தேவையென்றால், தேன் சேர்த்தால், சுவையான ஹெல்தியான வல்லாரை கீரை தேநீர் ரெடி. இப்பதிவை அதிகளவில் ஷேர் பண்ணுங்க!
News September 23, 2025
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு.. மிகப்பெரிய தாக்கம்

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் – டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. ‘எச்-1பி’ விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தியதால், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து ₹88.30-ஐ மீண்டும் தொட்டது. இதன் எதிரொலியாகவும், டாலர்களை மட்டுமே சார்ந்து இருக்காமல் மத்திய வங்கிகள் தங்கம் வாங்கி குவித்ததாலும், நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ₹1,120 உயர்ந்துள்ளது.