News October 13, 2025
VIRAL: பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் கனடா EX PM

கனடா EX PM ஜஸ்டின் ட்ரூடோ, பாடகி கேட்டி பெர்ரிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இருவரும் டேட் செய்து வருவதாக தொடர்ந்து தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் ஒரு ஹோட்டலில் டின்னர் சாப்பிட்ட புகைப்படங்களும் வெளியாகின. கேட்டி பெர்ரி தனது காதலனை சமீபத்தில் பிரிந்தார். அதேபோல் ஜஸ்டின், கடந்த 2023-ல் முன்னாள் மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
Similar News
News October 13, 2025
ஆச்சரியம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறியும் போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.
News October 13, 2025
சபரிமலை தங்கம் மாயம்: கூட்டு கொள்ளை அடித்தது அம்பலம்

சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரத்தில், தேவஸ்தான அதிகாரிகள் கூட்டு கொள்ளையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. தங்க தகடுகளை புதுப்பிக்க இடைத்தரகராக செயல்பட்ட உன்னி கிருஷ்ணன் போற்றி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் 9 பேர் உள்ளிட்ட 10 பேர் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சபரிமலை துவார பாலகர் சிலைகளின் கவசங்களில் 986 கிராம் தங்கம் குறைந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
News October 13, 2025
பாக். – ஆப்கன் மோதல்: ஒன்று சேர்ந்த இஸ்லாமிய நாடுகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்த இஸ்லாமிய நாடுகள் முன் வந்துள்ளன. இந்த விவகாரத்தை பேசி தீர்க்க வேண்டும் என சவுதி, ஈரான், கத்தார் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. அதேபோல், இருநாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய முன் வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்கள் இருந்ததாக கூறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், இருநாடுகளுக்கு இடையே சண்டை மூண்டது.