News May 4, 2024
விஐபி தரிசன சிபாரிசுகள் ஏற்கப்படாது

கோடை காலம் முழுவதும் விஐபி தரிசன சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி, கோடை விடுமுறை காரணமாக சுவாமி தரிசனத்தில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, நீர்மோர், குடிநீர் போன்றவை உடனுக்குடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.
Similar News
News September 22, 2025
சூரிய கிரகணத்தை பாருங்க.. EXCLUSIVE PHOTOS

இந்தாண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று அதிகாலையுடன் நிறைவடைந்துள்ளது. அதாவது, நேற்றிரவு 10.59 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை 3.23 வரை நீடித்தது. இதனை இந்தியாவில் பார்க்க முடியாது என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் சூரிய கிரகணத்தை பார்த்தவர்கள் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து அதனை காணுங்கள்!
News September 22, 2025
Health Tips: மாதவிடாய் பிரச்னையா? இதோ தீர்வு

மாதவிடாய் பிரச்னை பெரும்பாலான பெண்களுக்கு உள்ளது. இதில் முக்கியமான பிரச்னை மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதுதான். இதற்கு எளிய மருத்துவம் உள்ளது. 2 ஸ்பூன் கறிவேப்பிலை சாறு, அருகம்புல் சாறு தினமும் 3 வேளை சாப்பிட வேண்டும். 30 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர அதிக ரத்தப்போக்கு பிரச்னை சரியாகும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். நீங்கள் அக்கறை கொண்டுள்ள பெண்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 22, 2025
இரவில் செங்கோட்டையனுடன் சந்திப்பு

ஒன்றுபட்ட அதிமுகவிற்காக குரல் கொடுத்து வரும் செங்கோட்டையனை நேற்று இரவு EX MLA பாலகங்காதரன் உள்ளிட்ட OPS ஆதரவாளர்கள் சந்தித்து பேசியுள்ளனர். ஓபிஎஸ் – செங்கோட்டையன் ஓரிரு நாள்களில் நேரில் சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில், இருதரப்பும் நேற்று ஆலோசனை செய்திருக்கின்றன. இதில், இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்திப்பது குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.