News February 26, 2025

ஹைதியில் தலைவிரித்தாடும் வன்முறை: பொதுமக்கள் கதறல்

image

கரீபிய நாடான ஹைதியில் வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். ஆயுதம் ஏந்திய கும்பல், தலைநகர் போர்ட் ஓ பிரின்ஸில் வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களை பிடித்து உயிருடன் எரிப்பது, சுட்டுக் கொல்வது என வன்முறை தலைவரித்தாடுகிறது. தற்போது, அந்த கும்பல் டெல்மாஸ் நோக்கி முன்னேறுவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுவரை 10 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு நகர்ந்துள்ளனர்.

Similar News

News March 13, 2026

வீட்டு கேஸ் சிலிண்டர்.. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

image

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையை மத்திய அரசு அமைத்துள்ளது. இது மக்களிடையே நிலவும் அச்சங்களை போக்கும். SM-களில் பரவும் வதந்திகளை கண்காணித்து, அதன் உண்மைநிலையை விளக்க உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விற்பனையில் தட்டுப்பாடு இல்லை என அரசு விளக்கமளித்துள்ளது.

News March 13, 2026

சஞ்சுவை புறக்கணித்தாரா கில்?

image

சஞ்சு அணியில் இடம்பெற்றதால்தான், T20 அணியில் கில்லிற்கு இடம் கிடைக்கவில்லை என்ற கருத்துள்ளது. T20I WC வென்ற இந்திய அணியை பாராட்டி கில் வெளியிட்ட போஸ்ட்டில், சஞ்சுவை கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு விஷயங்களையும் முடிச்சு போட்ட நெட்டிசன்கள் கில் வன்மத்தை கக்கிவிட்டார் என விமர்சிக்கின்றனர். ஆனால், கில் பதிவிட்ட போட்டோ எடுக்கப்பட்ட Angle-ல், சஞ்சு மறைந்துவிட்டார் என்பதே உண்மை.

News March 13, 2026

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இழுபறியா?

image

மாநில அந்தஸ்து வழங்கினால் மட்டுமே NDA கூட்டணியில் இணைவோம் என்று என்.ஆர்.காங்., விடாப்பிடியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு 2.30 மணி வரை கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று மாலை அம்மாநிலத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி வருகிறார். முன்னதாக, புதுவை அரசு சார்பில் 13 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

error: Content is protected !!