News August 7, 2024

வினேஷ் போகத்தின் கடந்த கால வலி

image

இந்திய மல்யுத்தக்கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷண், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வினேஷ் போகத், கடந்தாண்டு டெல்லியில் போராடினார். அவருடன் சேர்ந்து போராடிய வீரர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டதுடன், பணத்திற்காக போராடுவதாக கொச்சைப்படுத்தப்பட்டனர். அந்த வினேஷ் போகத் தான், ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை உறுதிசெய்து, இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

Similar News

News December 2, 2025

சேலம்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

image

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 2, 2025

கரூர் துயர வழக்கை CBI விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு

image

கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை CBI விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில்(SC) தவெக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழக அரசு நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு(SIT) விசாரணை தொடர அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. SC உத்தரவின்பேரில் CBI அதிகாரிகள் ஒரு மாதமாக கரூரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 2, 2025

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது

image

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக IMD தெரிவித்துள்ளது. இது சென்னைக்கு 30 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது இன்று இரவு சென்னை – பாண்டிச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!