News August 7, 2024
வினேஷ் போகத் இதயங்களை வென்றுள்ளார்: முதல்வர்

வினேஷ் போகத் பதக்கத்தை இழந்தாலும் இந்திய மக்களின் இதயங்களை வென்றுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தகுதியிழப்பு காரணமாக உங்களின் சாதனையையும், உத்வேகத்தையும் யாராலும் தடுக்க முடியாது என்ற அவர், மில்லியன் கணக்கான இந்திய மகள்களுக்கு வினேஷ் போகத் முன்னுதாரணமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 100 கிராம் கூடுதல் எடை காரணமாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
Similar News
News December 10, 2025
கள்ளக்குறிச்சி -இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இன்று இரவு முதல் காலை வரை ரோந்து பணியை கவனிக்கும் பொறுப்பில் புதிய போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முத்துமணி இயக்கத்தில், 1வது பாகம் & 2வது பாகம் என இரண்டு பிரிவுகளில் ரோந்து குழுக்கள் செயல்பட உள்ளன.பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
News December 10, 2025
திருச்சி: கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவிதொகை திட்டத்தின் கீழ் உதவிதொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://umis.tn.gov.in/ என்ற தளத்தில் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
Delhi Blast: மேலும் ஒருவர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, மேலும் ஒருவரை NIA கைது செய்துள்ளது. 15 பேர் உயிரிழந்த இச்சம்பவத்தில், ஏற்கெனவே 7 பேர் கைதாகியுள்ள நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியை சேர்ந்த பிலால் நசீர் மல்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபிக்கு உதவிகள் செய்ததாகவும், குண்டுவெடிப்பு குறித்த ஆதாரங்களை அழித்ததாகவும் NIA குற்றஞ்சாட்டியுள்ளது.


