News March 16, 2024
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள 103 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 23, 2025
தி.மலை: இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வழியாக கோயம்புத்தூரில் இருந்து செய்யாறு நோக்கி அருண்குமார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். எதிர்திசையில் மேல்புழுதியூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் ராகவன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, அந்தனூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில், செய்யாறைச் சேர்ந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News September 22, 2025
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ், இன்று (செப். 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் 215 மனுக்கள் பெறப்பட்டன.
News September 22, 2025
தி.மலை: கடத்தலில் ஈடுப்பட்ட காவலர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே அரிய வகை எறும்புத்தின்னியை வேட்டையாடி, அதன் செதில்களை விற்க முயன்ற ஜமுனாமரத்தூர் தீயணைப்பு வீரர் ஜெயபால் உட்பட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். புரோக்கர்கள் போல் நடித்து வனத்துறையினர் அவர்களைப் பிடித்தனர். சுமார் 3 கிலோ எடையுள்ள செதில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தப்பி ஓடிய ராஜசேகர் என்பவரைத் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.