News March 16, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள 13 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-32, 37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Similar News

News December 21, 2025

மயிலாடுதுறை: மரப்பாலம் அமைக்கும் பணி தீவிரம்

image

திருவெண்காடு அருகே தென்னாம்பட்டினம் ஊராட்சி மாத்தாம்பட்டினம் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் முல்லை ஆற்றில் ஆபத்தான முறையில் மூங்கில் பாலத்தில் பயணம் செய்து வந்தனர். தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக தற்காலிக புதிய மரப்பாலம் அமைத்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் மேற்பார்வையில் பாலம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

News December 21, 2025

மயிலாடுதுறை: கிரைண்டர் வாங்க ரூ.5,000 மானியம்!

image

தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை முன்னேற்றும் வகையில் கிரைண்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படும். இதற்கு 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆதார் அட்டை,ரேஷன் கார்டு, வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க

News December 21, 2025

மயிலாடுதுறை: ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக இருந்த 32 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உடற்தகுதி தேர்வில் 32 பேர் கலந்து கொண்ட நிலையில் தகுதியுடைய 30 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 5 ஆம் தேதி தொடங்கி 45 நாட்களுக்கு மயிலாடுதுறை ஆயுதப்படை மைதானத்தில் அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

error: Content is protected !!