News March 16, 2024
வேலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 30 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, https://cra.tn.gov.in/-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 8, 2025
BREAKING: வேலூரில் மிக கனமழை

வேலூரில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வேலூரில் இன்று (ஆகஸ்ட் 8) இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். அனைவருக்கும் உடனே ஷேர் பண்ணுங்க
News August 8, 2025
வேலூர் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின்

வேலூர் மாவட்டத்தில் நாளை அணைக்கட்டு வட்டாரத்திற்கு நேமந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கணியம்பாடி வட்டாடத்திற்கு வல்லம் குமரன் மஹால், கே.வி.குப்பம் வட்டாரத்திற்கு கீழ் ஆலத்தூர் ஜி.வி.எஸ் மஹால் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளித்து பயன்பெறலாம்
News August 8, 2025
வேலூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

வேலூர் மாவட்ட காவல்துறையால் இன்று (ஆக.7) இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.