News March 16, 2024
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 77 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
தூத்துக்குடி மீனவர்களுக்கு ஒரு நற்செய்தி

தமிழக முதலமைச்சரின் சார்பில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் விதமாக சிறப்பு மாற்று வாழ்வாதார திட்டம் தொடங்கப்படும் என சட்ட மன்றத்தில் அறிவித்தார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டத்தில் 10000 மீனவர்கள் பயன்பெறுவார்கள் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தனது செய்தி குறிப்பு மூலம்தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
தூத்துக்குடி: அரசு தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 645 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மூலம் முதல் நிலை தேர்வு நடந்தது. இந்த முதன்மை தேர்வுக்கு தயாராகும் தூத்துக்குடி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் வரும் 10-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

தூத்துக்குடி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!


