News March 16, 2024

திருவாரூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள 139 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37 . கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News September 22, 2025

திருவாரூர் மக்களே.. தீபாவளி போனஸ் வேண்டுமா?

image

திருவாரூர் மக்களே தீபாவளி பண்டிகை நாட்களில் நீங்கள் பணியாற்றும் கம்பெனிகளில் Payment of bonus act 1965 படி 21,000 கீழ் சம்பாதிப்பவர்களுக்கு 8-20% சதவீதம் கட்டாயம் போனஸ் வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. எனவே கம்பெனில உங்க தீபாவளி போனஸ் கேட்டு வாங்குங்க. போனஸ் தரலைனா திருவாரூர் தொழிலாளர் நலத்துறை அலுவலரிடம் 04366-251121 என்ற எண்ணில் புகாரளியுங்க. இந்த தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 22, 2025

திருவாரூர்: விருது பெற ஆட்சியர் அழைப்பு

image

“ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்குத் தொண்டு செய்பவருக்கு தமிழ்நாடு அரசு அம்பேத்கர் விருது வழங்குகிறது. இந்த விருதுக்கு திருவாரூர் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பிக்க விரும்புவோர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து வரும் அக்.28-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.” என்று திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News September 22, 2025

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

செப்டம்பர் மாதத்திற்கான திருவாரூர், மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25.09.2025-ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை 10:30 மணியளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!